Saturday, May 24, 2014

மூன்றாம் படிவ ஆசிரியர்களுக்கான தமிழ்மொழி பயிலரங்கு

வணக்கம். கடந்த வெள்ளிக்கிழமை, 23.5.2014, காலை மணி 8.00 முதல் 1.00 மணி வரை, சா ஆலாம் சியாஸ்ட் (CIAST) பயிற்சிக் கழகத்தில் சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் மூன்றாம் படிவ தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு சிறப்பாக நடைபெற்றது.

இப்பயிலரங்கை சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவின் உதவி இயக்குநர் உயர்திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதன் மூலம் ஆசிரியர்கள் மூன்றாம் படிவத் தமிழ்மொழி தேர்வுத் தாளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி அறிந்து கொண்டனர். இப்பயிலரங்கைத் தேர்வு வாரிய தமிழ்ப்பிரிவின் திரு. சேகர் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.

மேலும் இப்பயிலரங்கை சிறப்பிக்கும் வண்ணம் ஐயா கவிஞர் கம்பார் கனிமொழி அவர்களும் தமிழ்நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறவாரியத்தின் தலைவருமான ஐயா திரு. விவேகானந்தன் அவர்களும் சிறப்பு வருகை புரிந்தனர்.


இவர்கள் வருகையின் சிறப்பு நோக்கம் என்னவெனில், ஐந்தாம் படிவ  மாணவர்களுக்கான கவிதை இலக்கிய விளக்க நூலை இலவசமாக வழங்குவதற்கேயாகும். ஐயா கவிஞர் கம்பார் கனிமொழி அவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்நூலை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது  ஐயா திரு.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறவாரியமாகும். இவ்வேளையில் தமிழுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தொண்டாற்றும் இவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 











No comments:

Post a Comment