Saturday, December 28, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2014

ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக!


Tuesday, December 24, 2013

புதிய சம்பளத் திட்ட அட்டவணை 2014


கூடுதல் பண்டிகை விடுமுறையை ஈடு செய்யும் நாள்கள் 2014

வணக்கம். எதிர்வரும் சீனப் புத்தாண்டு, நோன்பு பெருநாள், தீபாவளி ஆகிய பண்டிகைகளின் போது எடுக்கப்படும் கூடுதல் விடுமுறைகளை ஈடு செய்யும் நாள்களைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அவற்றை உங்கள் கவனத்துக்காக இங்கே கொடுத்துள்ளோம். 




Monday, December 23, 2013

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

வணக்கம். ஆசிரியப் பெரு மக்களுக்கு எங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


Saturday, December 21, 2013

தமிழ்மொழி ஆண்டு பாடத்திட்டம் 2014

வணக்கம்.தமிழ்மொழி ஆண்டு பாடத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.  படிவம் 1, படிவம் 2 &  படிவம் 3 ஆகிய  பாடத்திட்டங்களைப்  பி.பி.எஸ். தரச்சான்றுடன் தயாரித்து வழங்கிய ஆசிரியை திருமதி சிவபாக்கியம் அவர்களுக்கு நன்றி.

PERALIHAN.doc
PERALIHAN.pdf

Rancangan Tahunan ting 1.doc
Rancangan Tahunan ting 1.pdf

Rancangan Tahunan ting 2.doc
Rancangan Tahunan ting 2.pdf


ஆண்டுப் பாடத்திட்டம் படிவம் 4 2014.doc
ஆண்டுப் பாடத்திட்டம் படிவம் 4 2014.pdf

ஆண்டுப் பாடத்திட்டம் படிவம் 5 2014.doc
ஆண்டுப் பாடத்திட்டம் படிவம் 5 2014.pdf

இலக்கியம் படிவம் 4.doc

இலக்கியம் படிவம் 5.doc

*குறிப்பு : தங்களின் பள்ளியின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளவும்

Monday, December 2, 2013

எஸ்.பி.எம். தமிழ்மொழி தாள் 1 & 2 2013

வணக்கம். 2013-ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தமிழ்மொழி தாள் 1 & 2 இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நன்றி.

SPM BT K1 2013.pdf 

SPM BT K2 2013.pdf

Wednesday, November 27, 2013

எஸ்.பி.எம். இலக்கியத் தாள் 2013

வணக்கம். இவ்வாண்டின் (2013) எஸ்.பி.எம்.இலக்கியத்தாள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பைக் 'கிளிக்' செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

Thursday, October 31, 2013

தீபாவளி வாழ்த்துகள்

           ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

                                      "பொங்கும் மங்கலம்                                           எங்கும்  தங்குக!"   

   

Monday, September 23, 2013

கோம்பாக் மாவட்ட எஸ்.பி.எம். & பி.எம்.ஆர். தமிழ்மொழி தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கு

வணக்கம். கோம்பாக் மாவட்ட கல்வி இலாகாவும் கோம்பாக் மாவட்ட தமிழ்மொழி பணித்தியமும் இணந்து, கடந்த சனிக்கிழமை 21.09.2013, காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 1.00 வரை தாமான் செலாயாங் இடைநிலைப்பள்ளியிலும் ஸ்ரீசெலாயாங் இடைநிலைப்பள்ளியிலும்   இம்மாவட்டத்திலுள்ள அனைத்து எஸ்.பி.எம். & பி.எம்.ஆர். மாணவர்களுக்காகத் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். 



இப்பயிலரங்கு, ஆசிரியை திருமதி உஷா அவர்களின் பெரு முயற்சியினாலும் ஆசிரியை  திருமதி நிர்மலா மற்றும் ஆசிரியர்கள் திரு.மனோகரன்,  திரு. பீட்டர் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் திரு. இரவிசந்தர் அவர்களும் தம் ஆதரவினை வழங்கினார்.

ஆசிரியர் திரு.ச.தமிழன்பன் அவர்கள் பி.எம்.ஆர். மாணவர்களுக்கான பயிலரங்கை வழிநடத்திய வேளையில்,  ஆசிரியர்கள் திரு.முனுசாமி அவர்களும் ஆசிரியர் திரு.சுந்தரமூர்த்தி அவர்களும் எஸ்.பி.எம். மாணவர்களுக்கான பயிலரங்கை வழிநடத்தினர். 

இந்நிகழ்ச்சியை மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப் பிரிவு உதவி இயக்குநர் திரு.இராமன் அண்ணாமலை அவர்கள் உரை நிகழ்த்தி அதிகாரபூர்வமாக நிறைவு செய்தார்.



இவ்வேளையில் ஆசிரியைகள்  திருமதி உஷா மற்றும் திருமதி நிர்மலா அவர்களுக்கும் ஆசிரியர்கள் திரு. மனோகரன் மற்றும் திரு.பீட்டர் அவர்களுக்கும் நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Saturday, September 14, 2013

எஸ்.பி.எம். இலக்கியம் & தமிழ்மொழி முன்னோட்டத் தேர்வுத் தாள்கள் 2013

வணக்கம். எஸ்.பி.எம். இலக்கியம் & தமிழ்மொழி  முன்னோட்டத்தேர்வுத் தாள்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். பதிவிறக்கம் செய்து பயன்பெறவும். நன்றி.!

http://www.4shared.com/folder/m3ZhmL-f/___2013.html   

http://www.4shared.com/folder/MuZEUuu-/__2013.html

Saturday, September 7, 2013

எஸ்.பி.எம். இலக்கியப் பாடத் தேர்வுப் பயிலரங்கு 2013

வணக்கம். சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவின் தலைவர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும் , மலேசிய முத்தமிழ்ச் சங்கம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழகம் ஆகிவற்றின் ஆதரவிலும் , கடந்த 7.9.2013 (சனிக்கிழமை) காலை 8.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரை மலாயாப் பல்கலைக்கழகம் மொழி மொழியியல் புலத்தில்  எஸ்.பி.எம். இலக்கியப் பாடத் தேர்வுக்கான பயிலரங்கு  ஒன்று  நடத்தப்பட்டது. இதில் 250 படிவம் ஐந்து  மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இப்பயிலரங்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.  முதற்பிரிவு கவிதைப் பிரிவாகும். இதனை  ஆசிரியர் தமிழ்த்திரு. ந.பச்சைபாலன் அவர்கள் வழிநடத்தினார். 

இரண்டாம் பிரிவு, நாடகப் பிரிவாகும். இதனை  ஆசிரியர் தமிழ்த்திரு. கி.இளம்பூரணன் அவர்கள் வழிதடத்தினார். 

முன்றாம் பிரிவான  நாவல் பிரிவை (இலட்சியப் பயணம்) ஆசிரியர்  தமிழ்த்திரு. கோவி. மணிமாறன் சிறப்பாகப் படைத்தார். 

இவ்வேளையில், மலேசிய முத்தமிழ்ச் சங்கத்திற்கும்  மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழகத்திற்கும் எங்களின் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

*பயிலரங்கில் வழங்கப்பட்ட குறிப்புகளை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 

http://www.4shared.com/office/jDu_AI4S/____.html














Thursday, August 29, 2013

பி.எம்.ஆர். தமிழ்மொழி முன்னோட்டத்தேர்வு 2013

வணக்கம். பி.எம்.ஆர். தமிழ்மொழி 2013 முன்னோட்டத்தேர்வு தாள்கள் இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.4shared.com/folder/5gzyaYat/Percuaan_BT_PMR_2013.html 

http://www.4shared.com/folder/sRnPv-uy/___2012__2013.html

Thursday, August 15, 2013

2ஆம் ஆண்டு டான்ஸ்ரீ சோமா சுழற்கிண்ண நாடக விழா 2013

வணக்கம். கடந்த 04.08.2013, ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான் டேவான் ஹம்சாவில் 2ஆம் ஆண்டு டான்ஸ்ரீ சோமா சுழற்கிண்ண நாடக விழா 2013 காலை மணி 8.30 முதல்  இரவு மணி 9.00 வரை  நடைபெற்றது. 

இதில் சிலாங்கூர் மாநிலத்திலிருந்து ஒன்பது குழுக்கள் பங்கு பெற்றன. இக்குழுக்களில் பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள ராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் இரண்டவது இடத்தைப் பெற்று, RM1500-ஐ பரிசாக அடைந்து, மாநிலத்திற்குப் பெருமை தேடி தந்துள்ளனர்.  

இதில் பங்கேற்று நடித்த மாணவர்களுக்கும் அவர்களை இயக்கிய ஆசிரியர்களுக்கும் நம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக. 


Monday, July 15, 2013

கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2013

வணக்கம். கடந்த 13.07.2013, சனிக்கிழமை, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா உத்தாமா மண்டபத்தில், காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 1.00 வரை, மாநில கல்வி இலாகா தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டிலும் மலேசிய நண்பன் தமிழ் நாளிதழின் ஆதரவிலும் மாநில இடைநிலைப்பள்ளி மாணவர்களின் 11-ஆம் ஆண்டு கவிதை ஒப்புவிக்கும் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது.

கீழ்நிலைப் பிரிவில் :-

முதற்பரிசு         :      கோவலன் சுப்பிரமணியம் (SMK JALAN REKO)

இரண்டாம் பரிசு    :      சரஸ்வதி தேவி கணேஷ் (SMK SUBANG UTAMA)

மூன்றாம் பரிசு     :      மேனகா யாசுதேவர்  (SMK DATO HJ.KAMARUDDIN)


மேல்நிலை பிரிவில்:-

முதற்பரிசு         :      பூவரசன் சிதம்பரநாதன் (SMK KUALA KUBU BARU)

இரண்டாம் பரிசு    :      ஹரிஹரன் பன்னீர்செல்வம் (SMK SRI TANJUNG)

மூன்றாம் பரிசு     :      பூவரசி தென்னரசு  (SMK JALAN REKO)

விழாவினைச் சிறப்புச் செய்யும் வகையில் மலேசிய நண்பன் நாளிதழின்  நிருவாக இயக்குநர் மதிப்புமிகு டத்தோ ஷாப்பி ஜமான் பின் சிக்கந்தர் பாட்ஷா அவர்கள் வருகை புரிந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் (தமிழ்ப்பிரிவு) தமிழ்த்திரு. இராமன் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

















Friday, July 5, 2013

தமிழ்மொழித் தர அடைவு ஆவணம் படிவம் 2 வெளியீட்டு விழா

வணக்கம். கடந்த 21.6.2013, வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் படிவம் இரண்டிற்கான தமிழ்மொழித் தர அடைவு ஆவணம் வெளியீடு கண்டது.

இதனை மாநில கல்வி இலாகாவின் கல்வி நிர்வாகப் பிரிவின் தலைவர் புவான் ஹாஜா ஃபொசிஸ் பிந்தி புவாங் (Hjh. Fozizh bt. Buang) அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்கள்.

இப்பயிற்சித் தொகுப்பைச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட நன்கொடை கொடுத்து உதவிய உயர்திரு.மனோகரன் மொட்டையன் அவர்களுக்கும் அவர் சார்ந்த சிப்பாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 






Wednesday, July 3, 2013

பெட்டாலிங் உத்தாமா மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2013


வணக்கம். கடந்த 29.06.2013, சனிக்கிழமை, கோத்தா டாமான்சாரா பிரிவு 4, இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் உத்தாமா மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும்  போட்டி நடைபெற்றது.

கீழ்நிலைப்பிரிவில் முதல் இடத்தைக் கோத்தா டாமான்சாரா  பிரிவு 10 இடைநிலைப்பள்ளி மாணவன் தினேஸ்வரன் செல்லமுத்துவும்  இரண்டாம் நிலையையும் அதே இடைநிலைப்பள்ளி மாணவன் நவீன் காளிதாசனும் தட்டிச் சென்றனர்.

மேல்நிலைப்பிரிவில் முதல் நிலையை லா சால் இடைநிலைப்பள்ளி மாணவன் சுரேந்தர் முனுசாமியும் இரண்டாம் இடத்தை கோத்தா டாமான்சாரா பிரிவு 4,  இடைநிலைப்பள்ளி மாணவன் நவீன் பரமசிவமும்  பெற்றனர்.

வெற்றிப் பெற்ற இந்த நான்கு போட்டியாளர்களும் மாநில அளவிலான போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.