Wednesday, February 19, 2014

13-ஆம் ஆண்டு செந்தமிழ் விழா (2014).

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் ஏற்பாட்டிலான 13-ஆம் ஆண்டு செந்தமிழ் விழா (2014).

வணக்கம். கடந்த ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவிதை ஒப்புவிக்கும் போட்டி இவ்வாண்டு முதல் சற்று மாற்றத்துடன் செந்தமிழ் விழா என்ற பெயரில் மூன்று வகையான போட்டிகளுடன் நடைபெறவுள்ளது.

போட்டிகளின் பொது விதிமுறைகள்:-

1.0    ஒரு மாணவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

2.0    மாவட்ட அளவிலான போட்டிகள் 26.4.2014-குள் நடத்தப்பட வேண்டும்.

3.0    மாணவர்கள் தங்கள் படிவத்திற்கான போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.

4.0    மாணவர்கள் நிருணயிக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்திற்குள் படைப்புகளைப்    
      படைத்தல் வேண்டும்.

5.0    போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பள்ளிச் சீருடையில் மட்டுமே
      அனுமதிக்கப்படுவர்.

6.0    மாணவர்கள் தங்கள் படைப்பில்:-
      - இனம், மொழி, சமயம், அரசாங்கக் கொள்கை போன்றவற்றைக் குறைத்துப்      
        பேசக்கூடாது.

      - தனிப்பட்ட நபரையோ, தலைவரையோ, அமைப்பையோ விமர்சிக்கக் கூடாது.

7.0   இறுதி நேரத்தில் போட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கு ஏற்பாட்டுக்
      குழுவிற்கு முழு உரிமை உண்டு.

8.0    நீதிபதிகளின் முடிவே இறுதியானது.



போட்டிகளும் அவற்றின் விதிமுறைகளும்:-

1.0         கவிதை ஒப்புவிப்பு

1.1    படிநிலை 1 (புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வரை) மற்றும் படிநிலை 2
(படிவம் 4 முதல் படிவம் 5 வரை) என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.

1.2  ஒவ்வொரு படிநிலைக்கும் ஒரு பள்ளியிலிருந்து ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

1.3    மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைத்
      தேர்ந்தெடுத்து ஒப்புவிக்க வேண்டும்.

1.4  மாணவர்கள் தங்கள் கவிதையை 3 நிமிடங்களுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

1.5    புள்ளிகள் வழங்கும் முறை :

தொனி
10 புள்ளி
உச்சரிப்பு
10 புள்ளி
பாவனை
10 புள்ளி
சரளம்
10 புள்ளி
படைப்பு
10 புள்ளி
மொத்தம்
   50  புள்ளி

* கவிதைத் தொகுப்பு : இங்கே பதிவிறக்கம் செய்யவும். 
கவிதைத் தொகுப்பு 2014.pdf


2.0     கட்டுரைப் போட்டி

      2.1    புகுமுக வகுப்பு முதல் படிவம் 3 வரையிலான மாணவர்கள் மட்டுமே
      கலந்து கொள்ள முடியும்.

2.2    ஒரு பள்ளியிலிருந்து இருவர் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

2.3    கொடுக்கப்படும் தலைப்பில் 200 சொற்களுக்குள் கருத்து விளக்க கட்டுரை ஒன்றை 60 நிமிடங்களில் எழுத வேண்டும்.

2.4    முந்தைய பி.எம்.ஆர். தேர்வு மதிப்பீட்டு முறையைப் பின்பற்றி புள்ளிகள் வழங்கப்படும்.

2.6             கட்டுரைக்கான தலைப்புப் போட்டியின் போதே வழங்கப்படும்.



3.0     தமிழ்ப் பேச்சு (Public Speaking)

      3.1    படிவம் 4 முதல் படிவம் 6 வரையிலான மாணவர்கள் மட்டுமே கலந்து
      கொள்ள முடியும்.

      3.2    ஒரு பள்ளியிலிருந்து ஒருவர் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள
முடியும்.

      3.3    இப்போட்டி 2 சுற்றுகளாக நடத்தப்படும்.

Ø  முதல் சுற்று :-

கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் மாணவர்கள் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து அது தொடர்பாக 3 நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.
(தலைப்பினை மாணவர்களே சுயமாகத் தெரிவு செய்து, பேச வேண்டிய கருத்துகளைத் தயார் செய்து வர வேண்டும்)

தலைப்புகள்:-          * தமிழர் கலை
                              * தமிழர் விளையாட்டு
                              * தமிழர் சமயம்
                              * தமிழர் பண்பாடு

Ø  இரண்டாம் சுற்று:-

முதல் சுற்று முடிந்தவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பொது அறிவு தொடர்பான ஒரு தலைப்பு வழங்கப்படும். கொடுக்கப்படும் தலைப்புக்கு ஏற்ப அவர்கள் சுயமாக 2 நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.

*மாணவர்கள் தங்களைத் தயார் செய்ய 5 நிமிடங்கள் வழங்கப்படும்.

      3.4    புள்ளிகள் வழங்கும் முறை:-

கருத்து
10 புள்ளி
உச்சரிப்பு
10 புள்ளி
பாவனை/தொனி
10 புள்ளி
சரளம்
10 புள்ளி
மொழி வளம்
10 புள்ளி
மொத்தம்
   50 புள்ளி


      நன்றி

Saturday, February 8, 2014

பி.பி.எம்.ஆர். சுற்றறிக்கை 2014

வணக்கம். பி.பி.எம்.ஆர். தேர்வு பற்றிய புதிய சுற்றறிக்கையைத் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதனைத் தங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளோம். பதிவிறக்கம் செய்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும். நன்றி!

PPMR.pdf