Tuesday, December 22, 2015

Saturday, November 7, 2015

Monday, September 7, 2015

சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு

வணக்கம். கடந்த 4.9.2015, வெள்ளிக்கிழமை, கிள்ளான் ஹொங் ஹோய் சீனப்பள்ளி மண்டபத்தில், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு காலை மணி 8.00 முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெற்றது. 

இக்கருத்தரங்கை மாநிலக் கல்வி இலாகாவின் துணை இயக்குநர் துவான் ஹாஜி முகமட் சாலே பின் முகமட் காசிம், S.I.S. அவர்களால் அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் கல்விச் சவால்களைச் சமாளிக்க, நம்மைத் தயார் செய்யும் பொருட்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள், இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரின் படைப்புகள் அரங்கேறின. இவை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நம் கற்றல் கற்பித்தலுக்குப் பெரும்துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.  காலத்திற்கு ஏற்றவாறு தமிழாசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இக்கருத்தரங்கு உதவும்.  சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவுவின் முதன்மை கல்வி இயக்குநர் மதிப்புமிகு இராமன் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலில் இக்கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 







































எஸ்.பி.எம்.இலக்கியம் (2016 - 2020)

வணக்கம். கடந்த 28.8.2015, வெள்ளிக்கிழமை, காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 2.30 வரை, பயிற்சிப் பிரிவு, சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா,  துர்ஷினா  அரங்கில்,  எஸ்.பி.எம்.  இலக்கியம் (2016 - 2020) பயிலரங்கு மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.  

மலாய்மொழிப் பிரிவின் தலமை உதவி இயக்குநர் இஞ்சே அஹ்மட் கமால் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட பிப்ப்யிலரங்கில் சுமார் 70 இலக்கியம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பங்குபெற்றுச்  சிறப்பித்தனர். 

இப்பயிலரங்கில், புதிய பாடநூல்கள், பாட நூல்களின் விளக்கம்,தேர்வுக்கான கேள்விகளின் அமைப்பு முறை போன்றவை முதன்மை பயிற்றுநர்களால் சிறந்த முறையில் விளக்கப்பட்டது. 









Saturday, August 22, 2015

எஸ்.டி.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கு

வணக்கம். இன்று , 22.8.2015, சனிக்கிழமை, காலை மணி 8.00 தொடக்கம் பிற்பகல் மணி 1.30 வரை கோலாலம்பூர், மலாயா பல்கலைக்கழகம், கலைபுலத்தின் 'C' விரிவுரை மண்டபத்தில் எஸ்.டி.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கு சிறப்பாக நடந்தேறியது.  இப்பயிலரங்கு மலேசியக் தேர்வு மன்றம், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின் வரவேற்புரையுடன் இப்பயிலரங்கு தொடங்கியது.  மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் திரு. மோகனதாஸ், துணை பேராசிரியர் முனைவர் திரு. குமரன் மற்றும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் திரு.கந்தசாமி ஆகியோரால் இப்பயிலரங்கு சிறப்பாக வழிநடத்தப்பட்டது.