Monday, December 22, 2014

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

வணக்கம். ஆசிரியப் பெருமக்களுக்கு எங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, November 30, 2014

2014 எஸ்.பி.எம். தமிழ்மொழி தாள் 1 & 2

வணக்கம். இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம். தமிழ்மொழி தாள் 1 & தாள் 2  வினா தாள் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் .

https://www.4shared.com/office/8ayWcE_sce/BT_K1_SPM_2014.html

https://www.4shared.com/office/4sVq2J3Vce/BT_K2_SPM_2014.html

Tuesday, November 25, 2014

இலக்கியம் எஸ்.பி.எம். 2014

வணக்கம். இவ்வாண்டிற்கான எஸ்.பி.எம் இலக்கியத் தாள் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நன்றி.

 https://www.4shared.com/office/Nw4dDWU5ce/___2014.html

மூன்றாம் படிவ மதிப்பீடு 2014

வணக்கம். மூன்றாம் படிவ தமிழ்மொழி மதிப்பீட்டுத் தாள்கள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும். நன்றி.

https://www.4shared.com/office/BEpG-01bce/PT3_BT_2014_Set_1_1_.html  

https://www.4shared.com/office/E2SNuSx3ce/PT3_BT_2014_Set_2_1_.html 

https://www.4shared.com/office/hqRmV_aUce/PT3_BT_2014_Set_3_2_.html

Saturday, September 6, 2014

எஸ்.டி.பி.எம். தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கம்

வணக்கம்.  தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாக எடுக்கும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின்  இசைவுடனும் ஆதரவுடனும் கடந்த சனிக்கிழமை, 6.9.2014, காலை மணி 8.00 முதல் நண்பகல் 1 மணி வரை கிள்ளான் ஸ்ரீ முருகன் கல்வி மையத்தில் தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கம் ஒன்றனை ஏற்பாடு செய்து நடத்தியது. 

மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்க தேசியத் தலைவர் திரு. ப. கு. சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார். சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப் பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின் உரையுடன் இப்பயிலரங்கம் தொடங்கியது. மேலும், மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்க தேசியத் துணைத் தலைவர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் மாணவர்களுக்குச் சில நடைமுறை விதிகளை அறிவுறுத்தினார். 

ஆசிரியர் கோவி.மணிமாறன் முதல் பருவ மாணவர்களுக்கும்  ஆசிரியர்  கோவி. குமரன் மூன்றாம் பருவ மாணவர்களுக்கும் இப்பயிலரங்கைச் சிறப்பாக வழிநடத்தினர். 









Tuesday, September 2, 2014

தமிழ்மொழி பயிற்சித் தொகுதி PT3

வணக்கம். சிலாங்கூர் மாநில தமிழ்மொழிப் பணித்தியம் மூன்றாம் படிவ ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் பொருட்டு பயிற்சித் தொகுதி ஒன்றனை வெளியீடு செய்துள்ளது. இப்பயிற்சித் தொகுதியை ஆசிரியர்கள் தங்கள் மாவட்ட பணித்தியப் பொறுப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சித் தொகுதி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என நம்புகிறோம். நன்றி.
 

Wednesday, July 9, 2014

தேசிய அளவிலான செந்தமிழ் (வளர்தமிழ்) விழா 2014

கடந்த சனிக்கிழமை, 5.7.2014, உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்  தமிழ்மொழிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாம் ஆண்டாக இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான செந்தமிழ் (வளர்தமிழ்) விழா  மிகச்சிறப்பாக நடைபெற்றது.  


இவ்விழாவில் இடம்பெற்ற போட்டிகளில் சிலாங்கூர் மாநிலம் முதல் நிலையில் வெற்றி பெற்றது.  கட்டுரைப் போட்டியில்   கயல்விழி ராமச்சந்திரனும் (கீழ்நிலை படிவம்)  மலர்விழி கணேசனும் (மேல்நிலை படிவம்)  சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து முதல் நிலையில் வெற்றி பெற்றனர். அதே வேளையில், கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் ஆர். ரத்னேஸ்வரி (கீழ்நிலை படிவம்) மூன்றாம் நிலையில் வெற்றிப் பெற்றார்.

தமிழ்ப்பேச்சுப் போட்டியில் (மேல்நிலை படிவம்) குமரவேல் வேலன், பர்வீன் குமார் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலையில் வாகை சூடினர். 


இவ்விழாவில் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா தமிழ்மொழி உதவி இயக்குநர் இராமன் அண்ணாலை அவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். 





Thursday, July 3, 2014

செந்தமிழ் விழா 2014 பெட்டாலிங் உத்தாமா மாவட்டம்

வணக்கம். கடந்த 19 ஏப்ரல் 2014, சனிக்கிழமை, காலை மணி 8.00 முதல் மதியம் மணி 1.00 வரை தாமன் பெட்டாலிங் (பெண்கள்) இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தின் செந்தமிழ் விழா சிறப்புற நடைபெற்றது. 
இவ்விழாவில் கவிதை ஒப்புவிக்கும் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 

பிரிவு 4 கோத்தா டாமாண்சாரா இடைநிலைப்பள்ளி மாணவர்களும்  பிரிவு 10 கோத்தா டாமாண்சாரா இடைநிலைப்பள்ளி மாணவர்களும் வெற்றியாளர்களாக வாகை சூடினர். 








Wednesday, June 4, 2014

3-ஆம் படிவ மையம்சார் மதிப்பீட்டுத் தேர்வு (PT3) தமிழ்மொழித் தாள் (புதிய பதிப்பு)


அண்மையில் மலேசியத் தேர்வுக் கழகம் வெளியிட்ட ( புதுப்பிக்கப்பட்ட ) தேர்வுத்தாள். 
இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 

Saturday, May 24, 2014

12ஆம் ஆண்டு செந்தமிழ் விழா 2014

வணக்கம். கடந்த 3.5.2014, சனிக்கிழமை, தேசிய வகை விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், காலை 8.00 மணி முதல் மதியம் மணி 12.30 வரை, சிலாங்கூர் மாநில அளவிலான 12ஆம் ஆண்டு செந்தமிழ் விழா 2014 சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழா மாநில கல்வி இலாகா, தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டிலும் மலேசிய நண்பன் நாளிதழின் ஆதரவிலும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

விழாவினை சிறப்புச் செய்யும் வகையில் மலேசிய நண்பன் நாளிதழின் நிருவாகத் தலைவர் மதிப்புமிகு டத்தின் ரோக்கியா சிக்காந்தர் பாட்சா அவர்கள் வருகை தந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் (தமிழ்ப்பிரிவு) தமிழ்த்திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் முன்னிலை வகித்தார். 

இச்செந்தமிழ் விழாவில் கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி ஆகியவை இடம் பெற்றிருந்தன.