Monday, April 6, 2015

சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு 2015


தொடர்பு முகவரி:  Unit Bahasa Tamil, Jabatan Pendidikan Negeri Selangor.

Jalan Jambu Bol 4/3E, Seksyen 4, 40604 Shah Alam, Selangor.

அன்புடையீர் வணக்கம்! 

சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழ்மொழி பணித்தியத்தின் ஏற்பாட்டில் 'சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு 2015'  இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் ஒப்புதலோடும், கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் ஆதரவோடும்  இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

 இன்றைய கல்விச் சூழலின் தேவைக்கும் கற்பித்தல் நடவடிக்கையின் மாற்றத்திற்கும் ஏற்றவாறு ஆசிரியர் பெருமக்களை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 'தமிழ்மொழி கற்பித்தலுக்கான நவீன களம்' என்னும் கருப்பொருளில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. கருத்தரங்கு கீழுள்ளவாறு நடைபெறும். 

திகதி / நாள் : 31.7.2015 / சனிக்கிழமை
நேரம் : காலை மணி 8.00 தொடக்கம்
இடம் : CIAST மண்டபம், சா ஆலம்

 இருபத்தோராம் நூற்றாண்டின் கல்விக் கற்றலில் வகுப்பறை பயன்பாடும் வடிவமைப்பும், தமிழ்மொழி கற்பித்தலில்  உயர்நிலை சிந்தனையும் செயலாக்கமும் என்னும் வரையறையில் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள், தமிழாசிரியர்கள்பல்கலைக்கழகத்தின் முனைவர் கல்வி ஆய்வாளர்கள் முதலானோரிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகளைப் பெரிதும் எதிர்பார்க்கின்றோம். 15.6.2015-க்குள் கட்டுரையை ஒப்படைக்க வேண்டும். கட்டுரையின் வடிவமைப்பு தொடர்பான செய்திகளை ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

 இடைநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 200 தமிழாசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வர். தமிழர், தமிழ்மொழி முதலியோரின் வளர்ச்சியை முன்னிட்டு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு கருத்தரங்கு மலரும் இன்னபிற கையேடுகளும் இலவயமாக வழங்கப்படும்.

'சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு 2015'  சிறப்புடன் நடந்தேற தங்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டுமென நம்புகின்றோம்.

 தொடர்புக்கு:*திரு.அ. இராமன் 019 2307765 & 03 55186331 *திரு. சுந்தரமூர்த்தி 012348 0894 

நன்றி, வணக்கம்.
அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவினர்'சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு 2015'  

No comments:

Post a Comment