Saturday, June 22, 2013

கவிதை ஒப்புவிக்கும் போட்டி பெட்டாலிங் பெர்டாணா மாவட்டம் 2013

வணக்கம். கடந்த 22.06.2013சனிக்கிழமைபூச்சோங் பெர்மாய் இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் பெர்டாணா மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கீழ்நிலைப் பிரிவில் 32 போட்டியாளர்களும் மேல்நிலைப் பிரிவில் 24 போட்டியாளர்களும் பங்குப் பெற்றனர். மேலும்சிறப்பு வருகையாளராக சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

கீழ்நிலைப்பிரிவில் முதல் இடத்தைச் சுபாங் ஊத்தாமா இடைநிலைப்பள்ளியும் இரண்டாம் நிலையை ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியும் தட்டிச் சென்றன.

மேல்நிலைப்பிரிவில் முதல் நிலையைப் பூச்சோங் ஊத்தாமா1 இடைநிலைப்பள்ளியும்  இரண்டாம் இடத்தை ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியும் பெற்றன.

வெற்றிப் பெற்ற இந்த நான்கு போட்டியாளர்களும் மாநில அளவிலான போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

இவ்வேளையில்இப்போட்டியினைச் சிரமம் பாராது ஏற்று நடத்திய பூச்சோங் பெர்மாய் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களான திருமதி சரோஜா அவர்களுக்கும் திருமதி செல்லம் அவர்களுக்கும் மற்றும் அவர்தம் மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 












Friday, June 21, 2013

திறன் மதிப்பீட்டு அட்டவணை (PBS )

எஸ்.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கம் 2013

வணக்கம். கடந்த 20.5.2013, திங்கட்கிழமை, கிள்ளான் புக்கிட் திங்கி 2, ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் எஸ்.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கம், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின், தமிழ்ப்பிரிவு, உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின்   ஏற்பாட்டில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் ஆசிரியர்கள் திரு. முனுசாமி,  திரு. பரந்தாமன், திருமதி சுமதி, திருமதி கனகலெட்சுமி மற்றும் திரு. கோபாலன் ஆகியோரால் வழி நடத்தப்பட்டது. 

இப்பயிலரங்கினூடே, தமிழ்த்தாய் திருமதி இரத்தினவள்ளி விஜயராஜ் அம்மையார் அவர்களின் நிதியுதவியின் மூலம், நூல் வடிவம் பெற்ற எஸ்.பி.எம். தேர்வுக் கணைகள் என்ற பயிற்சி நூல் அம்மையாரின் திருக்கரங்களால் வெளியீடு கண்டது. 

இப்பயிலரங்கில் கலந்து சிறப்பித்த அம்மா இரத்தினவள்ளி அம்மையாருக்கும் சிறப்பு வருகையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.