Wednesday, July 9, 2014

தேசிய அளவிலான செந்தமிழ் (வளர்தமிழ்) விழா 2014

கடந்த சனிக்கிழமை, 5.7.2014, உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்  தமிழ்மொழிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாம் ஆண்டாக இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான செந்தமிழ் (வளர்தமிழ்) விழா  மிகச்சிறப்பாக நடைபெற்றது.  


இவ்விழாவில் இடம்பெற்ற போட்டிகளில் சிலாங்கூர் மாநிலம் முதல் நிலையில் வெற்றி பெற்றது.  கட்டுரைப் போட்டியில்   கயல்விழி ராமச்சந்திரனும் (கீழ்நிலை படிவம்)  மலர்விழி கணேசனும் (மேல்நிலை படிவம்)  சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து முதல் நிலையில் வெற்றி பெற்றனர். அதே வேளையில், கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் ஆர். ரத்னேஸ்வரி (கீழ்நிலை படிவம்) மூன்றாம் நிலையில் வெற்றிப் பெற்றார்.

தமிழ்ப்பேச்சுப் போட்டியில் (மேல்நிலை படிவம்) குமரவேல் வேலன், பர்வீன் குமார் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலையில் வாகை சூடினர். 


இவ்விழாவில் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா தமிழ்மொழி உதவி இயக்குநர் இராமன் அண்ணாலை அவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். 





Thursday, July 3, 2014

செந்தமிழ் விழா 2014 பெட்டாலிங் உத்தாமா மாவட்டம்

வணக்கம். கடந்த 19 ஏப்ரல் 2014, சனிக்கிழமை, காலை மணி 8.00 முதல் மதியம் மணி 1.00 வரை தாமன் பெட்டாலிங் (பெண்கள்) இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தின் செந்தமிழ் விழா சிறப்புற நடைபெற்றது. 
இவ்விழாவில் கவிதை ஒப்புவிக்கும் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 

பிரிவு 4 கோத்தா டாமாண்சாரா இடைநிலைப்பள்ளி மாணவர்களும்  பிரிவு 10 கோத்தா டாமாண்சாரா இடைநிலைப்பள்ளி மாணவர்களும் வெற்றியாளர்களாக வாகை சூடினர்.