Monday, April 30, 2012

எஸ்.பி.எம். இலக்கியம் 2012

வணக்கம். 2012-ஆம் ஆண்டின் எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய நூல்களின் விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். PPT ilatciyap payanam power point LPM 2011- pictures Final.pptx PPT Presentation - kavithai (new 2012).pptx PPT silappathikaram 2011.pptx silappathikaram 2012UM.pptx sinopsis silappatikaaram.docx சிலப்பதிகாரம் கதைச்சுருக்கம்.ppt

Saturday, April 28, 2012

19-ஆம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப் போட்டி 2012

வணக்கம். கடந்த 21.4.2012, சனிக்கிழமை, பந்திங் ஸ்ரீ ஜுக்ரா மண்டபத்தில் பத்தொன்பதாம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரஙபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி வெகு சிறப்பாக நடந்தேறியது. பந்திங் மெத்தடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகமும் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவும் இணைந்து இப்போட்டியினை ஏற்பாடு செய்திருந்தன. 

ஏற்பாட்டுக் குழுவினர்
ஆடல், பாடல் போன்ற மாணவர்களின் படைப்புகளுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் பங்குப்பெற்றன. இப்புதிர்ப்போட்டியில் சுங்கை பிலெக் இடைநிலைப்பள்ளி மாணவர்க்குழு  வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது.
                                      போட்டியைச் சிறந்த முறையில் வழிநடத்திய ஆசிரியர்கள் 

முதல் நிலயில் வெற்றிப் பெற்ற சுங்கை பிலெக் இடைநிலைப்பள்ளி

 முதல் மூன்று நிலைகளில் வெற்றிப் பெற்ற குழுவினர்


இந்நிகழ்ச்சியில், ஆசிரியப் பெருந்தகை ஐயா குழந்தைவேலு சுப்பையா அவர்கள், 2012ஆம் ஆண்டிற்கான தமிழ்வேள் கோ.சாரங்கபாணியார் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். 
 மதிப்புமிகு டத்தோ ஆ.சோதிநாதன் அவர்கள் ஆசிரியப் பெருந்தகை
ஐயா குழந்தைவேலு சுப்பையா அவர்களுக்குச் சிறப்புச் செய்கிறார். 

 நிகழ்ச்சியின் சிறப்பு வருகையாளர்கள்

பள்ளிமுதல்வர் சிறப்பிக்கப்படுகிறார்


 பள்ளி முதல்வர் திரு. வூன் பூன் இயாட் ,  மாநிலக் கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் திரு.இராமன் அண்ணாமலை, மயில் மாத இதழின் ஆசிரியர் மதிப்புமிகு டத்தோ ஆ. சோதிநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர். 

நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள்

இலக்கியப் பயிலரங்கம்

வணக்கம். கடந்த 18.04.2012, புதன்கிழமை, திட்டமிட்டப்படி எஸ்.பி.எம். இலக்கியப் பயிலரங்கம் இனிதே நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாவல், நாடகம், கவிதைகள் தொடர்பான விளக்கங்களை முறையே ஆசிரியர் பச்சைபாலன், ஆசிரியை இராஜேஸ்வரி, ஆசிரியர் கோபாலன் ஆகியோர் திறம்பட வழிநடத்திச்சென்றனர்.


மற்றொரு சிறப்பு அம்சமாக, ஆசிரியர் தர்மலிங்கம் அவர்களின் தன்னூக்க உரை அமைந்தது. இவ்வுரை கலந்துகொண்டோர் அனைவரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது.

இந்நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு, இவ்வாண்டிற்கான இலவச இலக்கிய புத்தகங்கள் மாணவர்களிடம் சேர்ப்பிக்க ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டமையாகும். இதன்மூலம் இலக்கிய புத்த்தகங்கள் இல்லை என்ற குறைபாடு நீக்கப்பட்டுள்ளது. இதற்கு மாண்புமிகு அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்திற்கும் இலக்கிய கழகத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Tuesday, April 17, 2012

சிலாங்கூர் மாநிலப் பணித்தியத்தின் இவ்வாண்டுக்கான முக்கிய நிகழ்ச்சிகள்


வணக்கம். இவ்வாண்டு நம் மாநிலப் பணித்தியம் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு நடத்தி வருகின்றது. 
அவை முறையே:-

1.     எஸ்.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கு
       
இப்பயிலரங்கு மாநிலத்திலுள்ள தமிழ்மொழி கற்பிக்கும் எல்லா  ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது (பி.ஓ.எல். ஆசிரியர்கள் உட்பட).    இப்பயிலரங்கு மாவட்ட வாரியாகப்   பின்வருமாறு நடத்தப்பட்டு வருகிறது.

எண்
மாவட்டம்
தேதி
இடம்
நேரம்
1
கோம்பாக் / உலு சிலாங்கூர்
07.4.2012 (சனி)
ஸ்ரீகாரிங் இடைநிலைப்பள்ளி
காலை 8.00
2
உலு லங்காட் / சிப்பாங்
28.4.2012 (சனி)
உலு லங்காட் மாவட்ட கல்வி இலாகா
காலை 8.00
3
பெட்டாலிங் உத்தாமா/ பெர்டாணா
28.4.2012 (சனி)
சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா
காலை 8.00
4
கிள்ளான் / கோல லங்காட்
28.4.2012 (சனி)
ஸ்ரீமுருகன் நிலையம், கிள்ளான்
காலை 8.00
5
சபாக் பெர்ணாம் / கோல சிலாங்கூர்
04.05.2012 (வெள்ளி)
ரந்தாவ் பஞ்சாங் இடைநிலைப்பள்ளி
காலை 8.00

     
2.     எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய பயிலரங்கு 

இப்பயிலரங்கு இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாவல், நாடகம், கவிதை தொடர்பான விளக்கங்களைக் கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

            திகதி  :      18.04.2012
            இடம்  :      ஸ்ரீமுருகன் நிலையம், கிள்ளான்
            நேரம் :      காலை 8.00 முதல் மாலை 4.30 வரை


3.     சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளிகளுக்கு  
      இடையிலான 19-வது கோ.சாரங்கபாணி கிண்ணப் 
      புதிர்ப் போட்டி 2012.

இப்போட்டியினைச் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவும் பந்திங், மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகமும் இணைந்து நடத்துகின்றன.

            திகதி  :      21.04.2012
            இடம்  :      ஜுக்ரா மண்டபம், பந்திங்
            நேரம் :      காலை 8.00 முதல் பிற்பகல் 1.30 வரை


4.     கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2012  

இந்த வருடாந்திர நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் மாவட்ட பணித்தியங்கள் தங்கள் மாவட்டங்களில் இப்போட்டியை மே மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். 


இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நல்ல முறையில் நடைபெற ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவார்கள் என நம்புகின்றோம். 

நன்றி. 


Saturday, April 14, 2012

எஸ்.டி.பி.எம். தமிழ்மொழி 2012

மலேசிய தேர்வு மன்றத்தால் வெளியிடப்பட்ட எஸ்.டி.பி.எம்.2012-ஐ பற்றிய விளக்கம், தமிழ்மொழிப் பாடத்திட்டம் & மாதிரிக் கேள்வித் தாள். ARAHAN DAN PANDUAN PENDAFTARAN CALON PEPERIKSAAN SIJIL TINGGI PERSEKOLAHAN MALAYSIA.doc pamplet-sis-pentaksiran-baharu-stpm.pdf panduan-umum-pbs.pdf STPM 2012 Peraturan dan Skema Peperiksaan .pdf STPM Bahasa Tamil 2012.pdf