Saturday, May 24, 2014

12ஆம் ஆண்டு செந்தமிழ் விழா 2014

வணக்கம். கடந்த 3.5.2014, சனிக்கிழமை, தேசிய வகை விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், காலை 8.00 மணி முதல் மதியம் மணி 12.30 வரை, சிலாங்கூர் மாநில அளவிலான 12ஆம் ஆண்டு செந்தமிழ் விழா 2014 சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழா மாநில கல்வி இலாகா, தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டிலும் மலேசிய நண்பன் நாளிதழின் ஆதரவிலும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

விழாவினை சிறப்புச் செய்யும் வகையில் மலேசிய நண்பன் நாளிதழின் நிருவாகத் தலைவர் மதிப்புமிகு டத்தின் ரோக்கியா சிக்காந்தர் பாட்சா அவர்கள் வருகை தந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் (தமிழ்ப்பிரிவு) தமிழ்த்திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் முன்னிலை வகித்தார். 

இச்செந்தமிழ் விழாவில் கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி ஆகியவை இடம் பெற்றிருந்தன. 














மூன்றாம் படிவ ஆசிரியர்களுக்கான தமிழ்மொழி பயிலரங்கு

வணக்கம். கடந்த வெள்ளிக்கிழமை, 23.5.2014, காலை மணி 8.00 முதல் 1.00 மணி வரை, சா ஆலாம் சியாஸ்ட் (CIAST) பயிற்சிக் கழகத்தில் சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் மூன்றாம் படிவ தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு சிறப்பாக நடைபெற்றது.

இப்பயிலரங்கை சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவின் உதவி இயக்குநர் உயர்திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதன் மூலம் ஆசிரியர்கள் மூன்றாம் படிவத் தமிழ்மொழி தேர்வுத் தாளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி அறிந்து கொண்டனர். இப்பயிலரங்கைத் தேர்வு வாரிய தமிழ்ப்பிரிவின் திரு. சேகர் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.

மேலும் இப்பயிலரங்கை சிறப்பிக்கும் வண்ணம் ஐயா கவிஞர் கம்பார் கனிமொழி அவர்களும் தமிழ்நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறவாரியத்தின் தலைவருமான ஐயா திரு. விவேகானந்தன் அவர்களும் சிறப்பு வருகை புரிந்தனர்.


இவர்கள் வருகையின் சிறப்பு நோக்கம் என்னவெனில், ஐந்தாம் படிவ  மாணவர்களுக்கான கவிதை இலக்கிய விளக்க நூலை இலவசமாக வழங்குவதற்கேயாகும். ஐயா கவிஞர் கம்பார் கனிமொழி அவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்நூலை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது  ஐயா திரு.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறவாரியமாகும். இவ்வேளையில் தமிழுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தொண்டாற்றும் இவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 











Sunday, May 4, 2014

செந்தமிழ் விழா 2014 - கோல சிலாங்கூர் மாவட்டம்

வணக்கம். கோலசிலாங்கூர் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா , கடந்த 30.4.2014, புதன்கிழமை, கோலசிலாங்கூர் புசாட் கெகியாத்தான் குரு (PKG) -இல் நடந்தேறியது.


இவ்விழாவினைக் கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் திரு. இராஜமாணிக்கம் அவர்கள் தொடக்கிவைத்த வேளையில், சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் பரிசளித்து நிறைவு செய்து வைத்தார். 

வெற்றியாளர்கள்:

கவிதை ஒப்புவித்தல்  (கீழ்நிலை)
இராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளியின் விஷாலினி த/பெ அகிலன்

கவிதை ஒப்புவித்தல்  (மேல்நிலை)

ஜெரம் இடைநிலைப்பள்ளியின் அஷ்வினி த/பெ முருகன்

பேச்சுப் போட்டி 
சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியின் பிரவீன் குமார் த/பெ  முனுசாமி

கட்டுரைப் போட்டி

1   சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியின் காயகன் த/பெ இன்பசேகரன்

2   இராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளியின் மோனிஷா  த/பெ  மூர்த்தி







செந்தமிழ் விழா 2014 - கிள்ளான் மாவட்டம்

வணக்கம். கடந்த 19.4.2014, சனிக்கிழமை , லா  சால் இடைநிலைப்பள்ளியில் , கிள்ளான் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா, காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 வரை  மாவட்ட பொறுப்பாளர் திரு. அருணாசலம் மற்றும் அவர் தம் செயலவையினரின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.  

இவ்விழாவினை சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகவின்  தமிழ்ப் பிரிவு உதவி இயக்குநர்  திரு இராமன் அண்ணாமலை அவர்கள், வெற்றியாளர்களுக்குப் பரிசளித்து, நிறைவு செய்து வைத்தார்.