Monday, July 15, 2013

கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2013

வணக்கம். கடந்த 13.07.2013, சனிக்கிழமை, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா உத்தாமா மண்டபத்தில், காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 1.00 வரை, மாநில கல்வி இலாகா தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டிலும் மலேசிய நண்பன் தமிழ் நாளிதழின் ஆதரவிலும் மாநில இடைநிலைப்பள்ளி மாணவர்களின் 11-ஆம் ஆண்டு கவிதை ஒப்புவிக்கும் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது.

கீழ்நிலைப் பிரிவில் :-

முதற்பரிசு         :      கோவலன் சுப்பிரமணியம் (SMK JALAN REKO)

இரண்டாம் பரிசு    :      சரஸ்வதி தேவி கணேஷ் (SMK SUBANG UTAMA)

மூன்றாம் பரிசு     :      மேனகா யாசுதேவர்  (SMK DATO HJ.KAMARUDDIN)


மேல்நிலை பிரிவில்:-

முதற்பரிசு         :      பூவரசன் சிதம்பரநாதன் (SMK KUALA KUBU BARU)

இரண்டாம் பரிசு    :      ஹரிஹரன் பன்னீர்செல்வம் (SMK SRI TANJUNG)

மூன்றாம் பரிசு     :      பூவரசி தென்னரசு  (SMK JALAN REKO)

விழாவினைச் சிறப்புச் செய்யும் வகையில் மலேசிய நண்பன் நாளிதழின்  நிருவாக இயக்குநர் மதிப்புமிகு டத்தோ ஷாப்பி ஜமான் பின் சிக்கந்தர் பாட்ஷா அவர்கள் வருகை புரிந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் (தமிழ்ப்பிரிவு) தமிழ்த்திரு. இராமன் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

















Friday, July 5, 2013

தமிழ்மொழித் தர அடைவு ஆவணம் படிவம் 2 வெளியீட்டு விழா

வணக்கம். கடந்த 21.6.2013, வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் படிவம் இரண்டிற்கான தமிழ்மொழித் தர அடைவு ஆவணம் வெளியீடு கண்டது.

இதனை மாநில கல்வி இலாகாவின் கல்வி நிர்வாகப் பிரிவின் தலைவர் புவான் ஹாஜா ஃபொசிஸ் பிந்தி புவாங் (Hjh. Fozizh bt. Buang) அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்கள்.

இப்பயிற்சித் தொகுப்பைச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட நன்கொடை கொடுத்து உதவிய உயர்திரு.மனோகரன் மொட்டையன் அவர்களுக்கும் அவர் சார்ந்த சிப்பாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 






Wednesday, July 3, 2013

பெட்டாலிங் உத்தாமா மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2013


வணக்கம். கடந்த 29.06.2013, சனிக்கிழமை, கோத்தா டாமான்சாரா பிரிவு 4, இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் உத்தாமா மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும்  போட்டி நடைபெற்றது.

கீழ்நிலைப்பிரிவில் முதல் இடத்தைக் கோத்தா டாமான்சாரா  பிரிவு 10 இடைநிலைப்பள்ளி மாணவன் தினேஸ்வரன் செல்லமுத்துவும்  இரண்டாம் நிலையையும் அதே இடைநிலைப்பள்ளி மாணவன் நவீன் காளிதாசனும் தட்டிச் சென்றனர்.

மேல்நிலைப்பிரிவில் முதல் நிலையை லா சால் இடைநிலைப்பள்ளி மாணவன் சுரேந்தர் முனுசாமியும் இரண்டாம் இடத்தை கோத்தா டாமான்சாரா பிரிவு 4,  இடைநிலைப்பள்ளி மாணவன் நவீன் பரமசிவமும்  பெற்றனர்.

வெற்றிப் பெற்ற இந்த நான்கு போட்டியாளர்களும் மாநில அளவிலான போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.




கோலசிலாங்கூர் மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2013

வணக்கம். கடந்த 19.06.2013, புதன்கிழமைபி.கே.ஜி. கோல சிலாங்கூரில்,  கோல சிலாங்கூர் மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும்  போட்டி நடைபெற்றது.

கீழ்நிலைப்பிரிவில் முதல் இடத்தைச் சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளி மாணவன் பிரவீன் முனுசாமியும்  இரண்டாம் நிலையை ஸ்ரீதஞ்சோங் இடைநிலைப்பள்ளி மாணவி யுர்மீதா சிவகுருவும் தட்டிச் சென்றனர்.

மேல்நிலைப்பிரிவில் முதல் நிலையைப்   சுல்தான் அப்துல் அசிஸ் இடைநிலைப்பள்ளி மாணவி கவின்முல்லையும் இரண்டாம் இடத்தை ஸ்ரீ தஞ்சோங்  இடைநிலைப்பள்ளி மாணவன் ஹரிஹரன் பன்னீர்செல்வமும் பெற்றனர்.

வெற்றிப் பெற்ற இந்த நான்கு போட்டியாளர்களும் மாநில அளவிலான போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.