Thursday, May 30, 2013

சிலாங்கூர் மாநில 20-ஆம் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி 2013

வணக்கம். சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவின் துணையோடு பந்திங் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 23.03.2013 (சனிக்கிழமை) பந்திங் ஸ்ரீ ஜுக்ரா மண்டபத்தில் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி நடைபெற்றது.


கிள்ளான் பத்து உஞ்சோர் இடைநிலைப்பள்ளி இவ்வாண்டு முதற்பரிசைத் தட்டிச் சென்றது. உலுலங்காட் மாவட்டத்தைச் சார்ந்த எங்கு உசேன் இடைநிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும் பெட்டாலிங் ஜெயா லா சால் இடைநிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும் பெற்றன. பதினேழு பள்ளிகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.  


இருபதாவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் தழுவிய நிலையில் 120 குழுக்கள்  பங்கு பெற்றன. இப்போட்டியினை, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் துணை இயக்குநரும் விரிவுரைஞருமாகிய தமிழ்த்திரு திருமிகு. சுப்பிரமணியம் அவர்கள் முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார். 


சேலம் நிறுனத்தின் உருமையாளர் தமிழ்நெஞ்சர் சேலம் கருப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தியதோடு சிறப்பு நன்கொடையும் வழங்கிச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் தமிழ்த்திரு இராமன் அண்ணாமலை அவர்களின் சிறப்புரை நிகழ்ச்சிக்கு மேலும் மெருகு சேர்த்தது. 


Wednesday, May 22, 2013

வாய்மொழித் தேர்வுக்கான படிவங்கள்

வணக்கம். வாய்மொழித் தேர்வுக்கான படிவங்களின் கோப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நன்றி.

13.0 RANGKA JADUAL KERJA.docx

21.0 JAWATANKUASA.docx

34.0 PELAKSANAAN PENTAKSIRAN.docx

46.0 FAIL  PENTAKSIR.docx

57.0 FAIL PENYELARASAN.docx

68.0 TAKLIMAT.docx

7INSTRUMEN PEMANTAUAN - sistem Fail.docx

Tuesday, May 21, 2013

எஸ்.பி.எம். தாள் 1 & 2 (PowerPoint)

வணக்கம். கடந்த 20.5.2013 & 22.5.2013-இல் நடைபெற்ற எஸ்.பி.எம்.பயிலரங்கில் படைக்கப்பட்ட கோப்பினை (PowerPoint) இங்கு கொடுத்துள்ளோம். பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும். நன்றி.
Kertas Dua SPM Seminar.pdf

Kertas Satu SPM Seminar 1.pdf