Monday, April 15, 2013

சிலாங்கூர் மாநிலத் தமிழ்மொழிப் பணித்தியத்தின் முக்கியச் செயல் திட்டங்கள் 2013

வணக்கம். இவ்வாண்டு நம் மாநிலப் பணித்தியம் சில முக்கிய செயல் திட்டங்களைத் திட்டமிட்டுச்  செயல்படுத்தி வருகின்றது.


அவை முறையே:-

1.     பிஎம்.ஆர். தமிழ்மொழிப் பயிலரங்கு

வணக்கம். .28.2.2013 கடந்த , வியாழக்கிழமை, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டில் கிள்ளான், புக்கிட் திங்கி, ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளி  தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது. 

2.   சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளிக்கிடையிலான 20-வது
    கோ.சாரங்கபாணி கிண்ணப் புதிர்ப்போட்டி 2013
இப்போட்டியினைச் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவும் பந்திங், மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளியின் தமிழ்மொழிக் கழகமும் இணைந்து கடந்த 23.3.2013, பந்திங், ஜுக்ரா மண்டபத்தில் சிறப்பாக நடத்தி முடித்தன.   

3.    எஸ்.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கு 

இப்பயிலரங்கு கடந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அமைப்புமுறையிலான வினாக்களுக்குப் பதில் அளிக்கும் உத்திமுறைகளை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

4.     கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2013

இந்த வருடாந்திர நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் மாவட்ட பணித்தியங்கள் தங்கள் மாவட்டங்களில் இப்போட்டியை மே மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். 

போட்டிக்கான கவிதைகளைக் கீழ்க்காணும் கோப்பைப் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளவும். 

5.     கட்டுரைப் போட்டி (படிவம் 4 &  5)
ஒவ்வொரு மாவட்டமும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் பள்ளியாரியாகப்  போட்டிவயை நடத்தி சிறப்பான கட்டுரைகளைத் அச்சேற்றி (Font:TSCu_Paranar, Size:12) மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மின் அஞ்சல் செய்யவும் (மே இறுதிக்குள்).

தலைப்புகளைக் கீழ்க்காணும் கோப்பைப் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளவும்.

 இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நல்ல முறையில் நடைபெற ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவார்கள் என நம்புகிறோம்.

நன்றி.