Monday, April 11, 2016

23-ஆம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி

வணக்கம். கடந்த 12.3.2016, சனிக்கிழமை, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பந்திங் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் எம்.கே. மண்டபத்தில் 23-ஆம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. 


இப்புதிர்ப்போட்டி பந்திங் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் ஏற்பாட்டிலும் மாநில கல்வி இலாகா, தமிழ்ப்பிரிவின் ஆதரவுடனும் நடைபெற்றது.

இப்போட்டியில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுமார் 80 இடைநிலைப் பள்ளிகள் தங்களின் திறமைகளைக் காட்டின. 


இவ்விழாவில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் தமிழ்த்திரு. ஏ.சகாதேவன் அவர்களும் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் தமிழ்த்திரு. இராமன் அண்ணாமலை அவர்களும் தஞ்சோங் சிப்பாட் இடைநிலைப்பள்ளியின் முதல்வர் திரு.இராஜேந்திரன் அர்களும் கலந்து சிறப்பித்தனர். 



பல்லாண்டு காலம் ஆசிரியராக இருந்து அரும்பணி செய்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்த்திரு .மணியம் அவர்களும்  தமிழியல் தொண்டர் தமிழ்த்திரு. கதிரவன் அவர்களும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அரும்பணி விருதளித்துச் சிறப்பிக்கப்பட்டனர். 


இப்போட்டியில் சுங்கை பிலேக் இடைநிலைப்பள்ளி வாகை சூடி சுழற்கிண்ணத்தைச் தட்டிச் சென்றது. 







Friday, February 5, 2016

செந்தமிழ் விழா போட்டிக்கான பொது விதிமுறைகள்.

வணக்கம் . செந்தமிழ் விழா போட்டிக்கான  பொது விதிமுறைகள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன.





Thursday, January 14, 2016

பொங்கல் வாழ்த்து!!

ஆசிரிய பெருமக்களுக்கு எங்களின் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

Friday, January 1, 2016

புத்தாண்டு வாழ்த்துகள்!!!


ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!!



Tuesday, December 22, 2015

Saturday, November 7, 2015

Monday, September 7, 2015

சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு

வணக்கம். கடந்த 4.9.2015, வெள்ளிக்கிழமை, கிள்ளான் ஹொங் ஹோய் சீனப்பள்ளி மண்டபத்தில், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு காலை மணி 8.00 முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெற்றது. 

இக்கருத்தரங்கை மாநிலக் கல்வி இலாகாவின் துணை இயக்குநர் துவான் ஹாஜி முகமட் சாலே பின் முகமட் காசிம், S.I.S. அவர்களால் அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் கல்விச் சவால்களைச் சமாளிக்க, நம்மைத் தயார் செய்யும் பொருட்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள், இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரின் படைப்புகள் அரங்கேறின. இவை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நம் கற்றல் கற்பித்தலுக்குப் பெரும்துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.  காலத்திற்கு ஏற்றவாறு தமிழாசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இக்கருத்தரங்கு உதவும்.  சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவுவின் முதன்மை கல்வி இயக்குநர் மதிப்புமிகு இராமன் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலில் இக்கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.